நகராட்சி அலுவலகத்திற்குள் தர்ணா
நகராட்சி ஆணையர் அலுவலகத்திற்குள் தர்ணா
பொள்ளாச்சி, நவ.8-நகராட்சி இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் குத்தகைதாரர் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி பல்வேறு அரசியல் சமூக இயக்கங்கள் நகராட்சி ஆணையர் அலுவலகத்திற்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட நாச்சிமுத்து பிரசவ விடுதியில் நகராட்சி சார்பில் இரு சக்கர வாகன நிறுத்துமிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் குத்தகைதாரர் நகராட்சி சார்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ள 8 ரூபாய் மட்டுமே ஒரு நாளைக்கு கட்டணமாக பெற வேண்டும். ஆனால், குத்தகைதாரர் ஒரு வாகனத்திற்கு ஒரு நாளைக்கு ரூ. 15 வரை கட்டணமாக வசூலிப்பதாக புகார் இருந்து வருகிறது. இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு அரசியல் சமூக இயக்கங்கள் நகராட்சி ஆணையரிடம் ஏற்கனவே புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், குத்தகைதாரர் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தொடர்ந்து வந்துள்ளார். இதனால் திங்கள் கிழமை பல்வேறு அரசியல் மற்றும் சமூக இயக்கங்கள் சார்பில் நகராட்சி ஆணையர் அலுவலகத்திற்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து நகராட்சி ஆணையர் தாணு மூர்த்தி இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
நகராட்சி அலுவலகத்திற்குள் தர்ணா
Reviewed by Cheran Express
on
November 08, 2022
Rating: 5
Reviewed by Cheran Express
on
November 08, 2022
Rating: 5
No comments