Breaking News

ஆர் ஓ இயந்திரத்தை துவக்கி வைத்த எம்எல்ஏ செ.தாமோதரன்


கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பேரூராட்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5.60 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்புஇயந்திரம்  அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இந்த புதிய இயந்திரம்  கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர்  செ.தாமோதரன்  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு அரசு மருத்துவர் வேலுமணி அவர்கள், கிணத்துக்கடவு பேரூராட்சித் தலைவர் கதிர்வேல் , கிணத்துக்கடவு பேரூராட்சி அதிமுக செயலாளர் மூர்த்தி , பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் டி.எல். சிங், கார்த்திகேயன், வார்டு செயலாளர் கோபால், தங்கராசு, லட்சுமணன், கழக நிர்வாகிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments