Breaking News

சாலையில் ஆதரவு இன்றி இருந்தவருக்கு தன்னார்வலர்கள் உதவி

சாலையில் ஆதரவு இன்றி இருந்தவருக்கு தன்னார்வலர்கள் உதவி

பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் கடந்த சில ஆண்டுகளாக  கிழிந்த உடையுடனும் நீண்ட முடி தாடியோடு சுற்றித்திரிந்த 
மனிதர் ஒருவரை தன்னார்வலர்கள் காவல் துறை உதவியினரோடு மீட்டு முடி திருத்தம் செய்து குளிக்க வைத்து புது ஆடைகள் அணிவித்து உணவு வழங்கினர்.
இந்த மனிதரை இப்பகுதியில் உள்ள நபர்கள் பிதாமகன் என்றே அழைப்பர். இதை கவனித்த தன்னார்வலர் பவித்ரன் என்பவர் சமூக ஆர்வலர் நேதாஜி பேரவை வெள்ளை நடராஜ் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல பகுதிகளில் சென்று முடி வெட்டி சீர் திருத்தும் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த நிஷார் சேட் என்பவரையும் தொடர்பு கொண்டு பேசி .அதன்படி இவரை மீட்டனர்.
நீண்ட நேரம் ஒத்துழைக்க மறுத்த அவரை பொள்ளாச்சி காவல் துறையினரும் இணைந்து சமாதனம் செய்து முடி திருத்தம் செய்தனர்.
இதை கவனித்த அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து அவருக்கு காலனி உணவு உள்ளிட்டவைகளை வாங்கிக் கொடுத்தனர்.
இது குறித்து வெள்ளை நடராஜ் கூறும்போது...
இவரிடம் பேசியபோது நாமக்கல்லைச் சேர்ந்தவர் குமரேசன் என்றும் சுமார் 60 வயது இருக்கலாம் என்றும் இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படியே சுற்றித்திரிந்தார் எனவும் 
இப்போது இவரை சராசரி மனிதன் போல பார்ப்பது மிக மகிழ்ச்சி என்றும் இவரை தொடர்ந்து காப்பகத்தில் வைத்து பராமரிக்க வேண்டும் என்றும் கூறினார்.

No comments