Breaking News

என்ஜிஎம் கல்லூரியில் பாரதியார் சிலை திறப்பு


என்ஜிஎம் கல்லூரியில் பாரதியார் சிலை திறப்பு
பொள்ளாச்சி, செப்.13-
மகாகவி பாரதியார் 100வது நினைவு ஆண்டை முன்னிட்டு பொள்ளாச்சி என்ஜிஎம் கல்லூரியில்
செவ்வாய்க்கிழமை பாரதியார் திருவுருவச்சிலை திறப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
 கல்லூரித்தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை
வகித்தார். கல்லூரி செயலாளர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக சிற்பி பாலசுப்ரமணியம் பங்கேற்றார். கல்லூரி
முதல்வர் முத்துக்குமரன் வரவேற்றார். குமரகுரு கல்வி நிறுவனங்களின்
இணைத்தாளாளர்கள் சங்கர் வாணவராயர், கருணாம்பிகை
வாணவராயர், கல்லூரிப்பொருளாளர் சிவக்குமார் ஆகியோர்
பங்கேற்றனர். பாரதியாரின் உருவச்சிலையை மாணவர்கள்
திறந்துவைத்தனர்.  கல்லூரி மேனாள் தமிழ்த்துறை பேராசிரியர்
அமுதனுக்கு கல்லூரி சார்பாக மகாகவி பாரதி விருது வழங்கப்பட்டது.
தமிழ்த்துறைத்தலைவர் மகேஷ்வரி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான
ஏற்பாடுகளை முதல்வர் மற்றும் நிர்வாக மேலாளர் ரகுநாதன் ஆகியோர்
செய்திருந்தனர்.





No comments