எம்எல்ஏ செ.தாமோதரன் தலைமையில் நிகழ்ச்சி
மாநில ஆவின் அண்ணா தொழிற்சங்கம் சார்பாக கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி பச்சாபாளையம் ஆவின் அருகே அஇஅதிமுக கழக கொடியேற்றி இனிப்பு வழங்கி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் . உடன் ஒன்றிய கழக செயலாளர் சக்திவேல் , ஒன்றிய பொருளாளர் பாபு, மாதம்பட்டி ஒன்றியம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி , ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தனலட்சுமி, ஒன்றிய தலைவர் ரவீந்திரன், ஆவின் கோவை மண்டல தலைவர் முத்துக்குமார், 9 வது வார்டு கிளை கழக செயலாளர் ரவி ,9 வது வார்டு உறுப்பினர் நந்தகோபால் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.
No comments