Breaking News

ஆதார் அட்டையை வாக்காளர் அட்டையுடன் இணைப்பது வரவேற்கத்தக்கது என எம்எல்ஏ வானதி சீனிவாசன் கருத்து


ஆதார் அட்டையை வாக்காளர் அட்டையுடன் இணைப்பது வரவேற்கதக்கது

எம்எல்ஏ வானதிசீனிவாசன்
பொள்ளாச்சி, ஆக.7-
ஆதார் அட்டையை வாக்காளர் அட்டையுடன் இணைப்பது வரவேற்க தக்கது என கோவை தெற்கு எம்எல்ஏ வானதிசீனிவாசன் தெரிவித்தார்.
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சி அடுத்த காரச்சேரியில் நடைபெற்றது.
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதிசீனிவாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாவட்டத்தலைவர் வசந்தராஜன், மாவட்ட பொறுப்பாளர் மோகன்மந்தராச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு கட்சிகளில் இருந்து 500க்கும் அதிகமானோர் பாஜகவில் இணைந்தனர்.
கோவை தெற்கு எம்எல்ஏ வானதிசீனிவானசன் கூறியது.. பாஜகவில் ஆர்வத்துடன் பலர் வந்து இணைந்துவருகின்றனர். தமிழகத்தில் பாஜக எதிர்பார்த்ததைவிட மாற்றத்தைகொண்டுவருகிறது. தமிழகத்திற்கு மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டுவருகிறது. நாட்டில் ஆதார் அட்டையை வாக்காளர் அட்டையுடன் இணைப்பது வரவேற்கதக்கது. திமுக கள்ள ஓட்டுப்போடுவதற்காக இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள். மகளிருக்காக இலவச பேருந்து பயணம் திட்டத்தில் பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளன. பல்வேறு மத்திய அரசின் திட்டங்களை திமுக தங்கள் பெயரை வைத்து மக்களுக்கு வழங்கி தாங்கள் வழங்கியதுபோல் காட்டிவருகின்றனர் என்றார். பாஜக நிர்வாகிகள் ரகுநாதன், துரை, கோவிந்தராஜ், ஆனந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments