Breaking News

பொள்ளாச்சியில் கருணாநிதி நினைவு நாள் நிகழ்ச்சி


பொள்ளாச்சியில் கருணாநிதி நினைவுநாள்
பொள்ளாச்சி, ஆக.7-
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி 4ம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சியில் நடைபெற்றது.
திமுக சார்பில் பல்லடம் சாலையில் உள்ள திமுக அலுவலகத்தில் கருணாநிதி உருவப்படத்திற்கு கட்சியினர் மரியாதை செய்தனர். தொடர்ந்து திமுக அலுவலகத்தில் இருந்து தேர்நிலையம், பெரியபள்ளிவாசல் வழியாக அமைதி ஊர்வலமாக திமுகவினர் சென்றுபேருந்து நிலையத்தில் நிறைவுசெய்தனர். திமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கண்ணப்பன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். திமுக மாவட்ட செயலாளர் மருத்துவர் வரதராஜன், நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பொள்ளாச்சி நகர்மன்றத்தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ வி.பி.சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் அமுதபாரதி, திப்பம்பட்டி ஆறுச்சாமி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

No comments