Home
/
செய்திகள்
/
பொள்ளாச்சியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்-ஒட்டன்சத்திரம் தண்ணீர் திட்டத்தை கைவிட கோரிக்கை
பொள்ளாச்சியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்-ஒட்டன்சத்திரம் தண்ணீர் திட்டத்தை கைவிட கோரிக்கை
பொள்ளாச்சி, ஜூலை.13-
ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர்
கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக்கோரியும்,
ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்
கோரியும் கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில்
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் புதன்கிழமை மாலை
பிஏபி திட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில்,
ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர்
கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.
இதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில்
எதிர்ப்பு உள்ளது. இந்நிலையில், கோவை தெற்கு மாவட்ட
பாஜக சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஒட்டன்சத்தி
ரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக்
கோரியும்,
ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்
கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத்தலைவர்
வசந்தராஜன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர்
மோகன்மந்தராச்சலம், முன்னாள் மாவட்டத்தலைவர்கள்
பாபாரமேஷ், முத்துராமலிங்கம், நகரத்தலைவர் பரமகுரு,
விவசாய அணி மாநில துணைத்தலைவர் குமரேஷ், சிறுபாண்மை
பிரிவு மாநில செயலாளர் ஜான்சன், மாவட்ட பொதுச்செயலாளர்கள்
துரை, ஆனந்த், கோவிந்தராஜ், மாவட்ட துணைத்தலைவர் தனபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் 1500க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
மாவட்டத்தலைவர் வசந்தராஜன் ஆர்ப்பாட்டத்தின்போது
பேசியது...
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் தமிழகத்திற்கு ஒப்பந்தப்படி
கிடைக்கவேண்டிய 30.5டிஎம்சி தண்ணீர் கிடைப்பதில்லை.
இதனால், பிஏபி பாசன பகுதியில் உள்ள 4.25 லட்சம் ஏக்கர்
நிலங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே
தண்ணீர் கிடைத்துவருகிறது. இதனால், பிஏபி விவசாயிகள்
முழுமையான விவசாயம் செய்யமுடியாத நிலையில் இருந்து
வருகின்றனர். இந்நிலையில், பிஏபி திட்டத்தை ஆதாரமாக
கொண்டு ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு
தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அறசு
அறிவித்ததுள்ளது.
இந்த திட்டத்தால் பிஏபி பாசன பகுதிகள் கடுமையாக பாதிக்கும்.
மேலும் கோவை, திருப்பூர் மாவட்ட குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்.
பிஏபி திட்டத்தில் நீர் ஆதாரத்தை பெருக்க ஆனைமலையாறு
மற்றும் நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவோம் என
பொள்ளாச்சியில்
திமுக தேர்தல் வாக்குறுதி வழங்கியது. இந்த வாக்குறுதி
நிறைவேற்றப்படவில்லை. பிஏபி திட்டத்தில் நீர்
ஆதாரத்தை அதிகரிக்கும் இந்த திட்டங்களை நிறைவேற்றாமல்
ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் காெண்டும்செல்லும் திட்டத்தை
நிறைவேற்ற பாஜக அனுமதிக்காது. தொடர்ந்து போராட்டம்
நடைபெறும் என்றார்.
----
பொள்ளாச்சியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்-ஒட்டன்சத்திரம் தண்ணீர் திட்டத்தை கைவிட கோரிக்கை
Reviewed by Cheran Express
on
July 13, 2022
Rating: 5
Reviewed by Cheran Express
on
July 13, 2022
Rating: 5
No comments