பொள்ளாச்சி நகராட்சி கவுன்சில் கூட்டம்
பொள்ளாச்சி, ஜூலை.19-பொள்ளாச்சி நகராட்சி அவசர கூட்டம் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் தாணுமூர்த்தி முன்னிலை வகித்தார். நகர மன்ற உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சிற்பி பாலசுப்பிரமணியத்திற்கு வீடு வழங்கியதற்கு நகர் மன்ற உறுப்பினர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
No comments