Breaking News

குடியரசுத்தலைவர் தேர்தல் வெற்றிக்கொண்டாட்டம்


பொள்ளாச்சி, ஜூலை.22-
குடியரசுத்தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிட்ட திரவுபதி முர்மு வெற்றிபெற்றதை வெள்ளிக்கிழமை பொள்ளாச்சியில் பாஜகவினர் கொண்டாடினர்.
பாஜக கட்சி சார்பாக குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்ட திரவுபதி முர்மு வெற்றிபெற்றார். இதை பொள்ளாச்சி நகர பாஜக சார்பில் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், ஊர்வலம் சென்றும் கொண்டாடப்பட்டது. பாஜக நகரத்தலைவர் பரமகுரு தலைமை வகித்தார். நகர பார்வையாளர் மருத்துவர் ஜெயமுருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட பார்வையாளர் மோகன்மந்தராச்சலம், மாவட்டத்தலைவர் வசந்தராஜன், மாவட்ட நிர்வாகிகள் துரை, ஆனந்த்,தனபாலகிருஷ்ணன், மணிகண்டன், கெளரிசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

---

No comments