மாவட்ட ஆட்சியரிடம் பேரூராட்சி தலைவர் கோரிக்கை மனு
கோவை மாவட்டம், ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நிதி ஒதுக்கி சுற்றுச்சுவர் கட்டி தர வேண்டும் என பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்க குமார் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்துள்ளார்.
அது பற்றிய விவரம்.... ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1200க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தை அதிகமான விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பள்ளி மைதானத்தில் ஒரு பகுதியில் தாலுகா அலுவலக கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மைதானம் பகுதி குறைந்துள்ளது. இது தவிர தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பள்ளி மைதானத்திலேயே வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் மேலும் விளையாட்டு மைதானம் பரப்பு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களும், பள்ளி மாணவர்களும் விளையாட்டு மைதானத்தை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகவே பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு நிதி ஒதுக்கி சுற்றுச்சுவர் கட்டித் தர வேண்டும். இவ்வாறு ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்ககுமார் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.
No comments