பொள்ளாச்சி ரவுண்டானா சாலையில் மரம் விழுந்து விபத்து
பொள்ளாச்சி- ராட்சத மரம் விழுந்து விபத்து
பொள்ளாச்சி ரவுண்டானா அருகே உள்ள சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை நீர் தேக்க தொட்டி வளாகத்தில் இருந்த மரம் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு மின் கம்பங்கள் சேதமடைந்தன. மின்சார இணைப்புடன் மின் கம்பிகள் சாலையில் அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
No comments