பாஜக கோவை தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம்
பாஜக கோவை தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்
பொள்ளாச்சி, ஜூலை.11-
கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் பொள்ளாச்சியில் திங்கள்கிழமை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தை ஆதாரமாக கொண்டு ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு அரிவித்துள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், திங்கள்கிழமை பொள்ளாச்சியில் நடைபெற்ற பாஜக கோவை தெற்கு மாவட்ட ஆலோசனைக்கூட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள அந்த திட்டத்தை கைவிடக்கோரியும், அரசாணையை ரத்து செய்யக்கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், புதன்கிழமை கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் பொள்ளாச்சியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டத்தை நிறைவேற்றிக்கோரியும், ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் முக்கிய கோரிக்கை முன்வைக்கவும் முடிவு செய்யப்பட்டது. மாவட்டத்தலைவர் வசந்தராஜன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர்கள் ஆனந்த், கோவிந்தராஜ், துரை, மாநில விவசாய அணி துணைத்தலைவர் குமரேசன், மாவட்ட பார்வையாளர் மோகன்மந்தராச்சலம் உட்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பாஜக கோவை தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம்
Reviewed by Cheran Express
on
July 11, 2022
Rating: 5
Reviewed by Cheran Express
on
July 11, 2022
Rating: 5

No comments