Breaking News

ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி பாஜக 13ம் தேதி ஆர்ப்பாட்டம்



ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி
பாஜக 13ம் தேதி ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி, ஜூலை.9-
ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்
கோரி வரும் 13ம் தேதி பாஜக சார்பில் பொள்ளாச்சியில்
ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் தமிழகத்திற்கு
30.5 டிஎம்சியும், கேரளத்திற்கு 19.55 டிஎம்சியும் தண்ணீர்
பகிர்ந்துகொள்ளவேண்டும். கேரளத்திற்கு ஒப்பந்தப்படி
தண்ணீர் வழங்கப்பட்டுவருகிறது. ஆனால், தமிழகத்திற்கு
கிடைக்கவேண்டிய 30.5 டிஎம்சி தண்ணீர் கிடைப்பதில்லை.
தண்ணீர் கிடைக்காததற்கு காரணம் ஆனைமலையாறு
 மற்றும் நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படாமல் இருப்பது
முக்கிய காரணமாக உள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றக்
கோரி விவசாயிகள் நீண்ட கால கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
ஆனால், தற்போதுவரை திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
இதனால், விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 13ம் தேதி
பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில்
ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற
கோரிக்கை வைத்து மாவட்டத்தலைவர் வசந்தராஜன்
தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. ஆர்ப்பாட்டத்தில்
ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர்
கொண்டு செல்லும் திட்டத்தை ரத்துசெய்யக்கோரியும்
கோரிக்கை வைக்கப்படவுள்ளது.

No comments