பிஏபி விவசாயிகள் போராட்டம் ஒத்திவைப்பு
பிஏபி விவசாயிகள் போராட்டம் ஒத்திவைப்பு
பொள்ளாச்சி, ஜூன்.25-
ஆழியாலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக்கோரி வரும் 27ம் தேதி பிஏபி விவசாயிகள் சார்பில் பொள்ளாச்சியில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிஏபி திட்டத்தில் நீர்ப்பற்றாக்குறை உள்ள நிலையில் ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை கைவிடக்கோரி வரும் 27ம் தேதி பொள்ளாச்சியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கோவை, திருப்பூர் மாவட்ட பிஏபி விவசாயிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவுதரும் வகையில் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட நீர் பாதுகாப்பு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் 30க்கும் அதிகமான அமைப்புகள் இணைந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன. மேலும் வரும் 27ம் தேதி விவசாயிகளுடன் வியாபாரிகள், தொழில்துறையினர், ஆட்டோ ஓட்டுனர்கள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் பங்கேற்பதுடன் கடையடைப்பு, ஆட்டோ வேலை நிறுத்தம் போன்றவை அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், போராட்டத்தி்ல 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்க பொதுமக்கள் ஆதரவும் திரட்டப்பட்டது. இந்நிலையில், பிஏபி முன்னாள் திட்டக்குழுத்தலைவர் மெடிக்கல் பரமசிவத்திடம் முதல்வரின் செயலர் உமாநாத் தொலைபேசியில் அழைத்து வரும் 1ம் தேதி அரசு சார்பில் நடைபெறும் பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையிலும் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை அலுவலகத்தில் சனிக்கிழமை இரவு அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாய பிரதிநிதிகள், பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட நீர் பாதுகாப்பு கூட்டமைப்பை சேர்ந்தவர்கள், வியாபாரிகள் என 30க்கும் அதிகமான அமைப்பினர் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் 1ம் தேதி அரசு சார்பில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டதுடன், வரும் 27ம் தேதி நடைபெறும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படும் அறிவிக்கப்பட்டது. அரசு நடத்தும் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும் என மெடிக்கல் பரமசிவம் தெரிவித்தார்.
----
பிஏபி விவசாயிகள் போராட்டம் ஒத்திவைப்பு
Reviewed by Cheran Express
on
June 25, 2022
Rating: 5
Reviewed by Cheran Express
on
June 25, 2022
Rating: 5
No comments