நீராறு அணையில் லஞ்சம்
நீராறு அணையில் தடைசய்யப்பட்ட பகுதிக்குள் நுழைய லஞ்சம்
பொள்ளாச்சி
பிஏபி திட்டத்தில் நீராறு அணையில் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைய ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் சுற்றுலாப் பயணிகளை அழைத்து செல்லப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
பரம்பிக்குளம்-ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் மேல் நீராறு, கீழ் நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம் ,தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய ஒன்பது அணைகள் கட்டப்பட்டு தமிழகம்-கேரளா இடையே நீர் பகிர்மானம் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டம் முழுவதும் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. மலையை குடைந்து அணைகள் கட்டப்பட்டு உள்ளது. சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் ஏதாவது ஒரு இடத்தில் பழுது ஏற்பட்டாலும் மொத்த திட்டத்திற்கும் தண்ணீர் செல்வது பாதிக்கப்பட்டு தமிழகத்தில் 4.25 லட்சம் ஏக்கரும், கேரளாவில் 25 ஆயிரம் ஏக்கரும் பாசனம் பாதிக்கப்படும். இது தவிர மூன்று மாவட்ட மக்களின் குடிநீர் கிடைப்பதும் பாதிக்கப்படும்.
இந்த திட்டத்தை பாதுகாப்பதில் அரசு மிகவும் கவனம் செலுத்தி வருகிறது. இப்படி இருக்கும் சூழலில் கீழ் நீராறு அணையில் சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிட ஒரு சில பகுதிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், ஒரு சில ஊழியர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு அணையின் சுரங்கப் பகுதி மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்கின்றனர்.
அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் தங்களது செல்போன் எண்ணை கொடுத்து அணைக்கு எப்போது வந்தாலும் தங்களை அழைத்தால் அணையின் எந்தப் பகுதிக்கும் அழைத்துச் செல்வோம். இதுதவிர, வனப்பகுதிக்குள் இரவு நேரத்தில் வனவிலங்குகளை பார்வையிட அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே கேரளத்தை ஒட்டியுள்ள வால்பாறை பகுதியில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்படுகிறது. இதுபோன்று செய்வதால் தீவிரவாதிகள் அல்லது மாவோயிஸ்டுகள் போன்றவர்கள் சுற்றுலா பயணிகள் போன்று அணையின் அனைத்து பகுதிகளையும் லஞ்சம் கொடுத்து பார்வையிட்டு சென்றுவிட்டால் அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும். இது போன்று செயல்படும் ஊழியர்கள் மீது கோவை மண்டல உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.
நீராறு அணையில் லஞ்சம்
Reviewed by Cheran Express
on
May 25, 2022
Rating: 5
Reviewed by Cheran Express
on
May 25, 2022
Rating: 5
No comments