Breaking News

பிஏ சர்வதேச பள்ளியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா

பிஏ சர்வதேச பள்ளியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா
பொள்ளாச்சி, மார்ச்.25-
 பொள்ளாச்சி பிஏ சர்வதேச பள்ளியில் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.
 கோவை ரூட்ஸ் இண்டஸ்டிரீஸ் இந்தியா லிமிடெட் இயக்குனர் கவிதாசன் தலைமை வகித்தார். முதல்வர் மைதிலி ஆண்டறிக்கை வாசித்தார். பிஏ கல்வி நிறுவனங்களின் தலைவர் அப்புக்குட்டி முன்னிலை வகித்தார். இந்த கல்வி ஆண்டில் சாதனை புரிந்த மாணவன் கீர்த்தனுக்கு பழனிச்சாமி விருதும், மாணவி ஷாபிக்காவுக்கு அம்மனிஅம்மாள் விருதும் வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பிஏ கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் லட்சுமி அப்புக்குட்டி, தலைமை நிர்வாக அதிகாரி மணிகண்டன், பிஏ தொழில்நுட்பக்கல்லூரி முதல்வர் பொன்னம்பலம், கல்வியியல் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments