Breaking News

அரசு பள்ளியில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்


அரசு பள்ளியில் மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல்
பொள்ளாச்சி, மார்ச்.21-
வடுகபாளையம் நகராட்சி அரசு பள்ளியில் மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியது குறித்து நகராட்சித்தலைவர் மற்றும் ஆணையர் திங்கள்கிழமை விசாரணை நடத்தினர்.
பொள்ளாச்சி வடுகபாளையம் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப்பள்ளியில்  திங்கள்கிழமை வழக்கம்போல் பள்ளிக்கு ஆசிரியர்கள் பணிக்கு சென்றுள்ளனர். பள்ளியை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பள்ளி வகுப்பறைகள் மற்றும் அலுவலக அறைகளுக்குள் கற்களை வீசி சேதப்படுத்தியது தெரியவந்தது. மேலும், கழிப்பிடத்தின் பைப்லைன்களும் சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலையடுத்து, நகராட்சித்தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் நகராட்சி ஆணையர் தானுமூர்த்தி ஆகியோர் பள்ளி வளாகத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பள்ளி சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க நகராட்சித்தலைவர் மற்றும் ஆணையர் அறிவுறுத்தல் வழங்கினர். ஞாயிற்றுக்கிழமை பள்ளி வளாகத்தில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. 
 

No comments