Breaking News

திருமண மண்டபம் அருகே தீ விபத்து! திருமணத்திற்கு வந்தவர்கள் தப்பி ஓட்டம்


திருமண மண்டபம் அருகே தீ விபத்து திருமணத்திற்கு வந்தவர்கள் தப்பி ஓட்டம்
பொள்ளாச்சி, மார்ச்.16-
 ஆனைமலை அடுத்த அம்பராம்பாளையம் பகுதியில் திருமண மண்டபம் அருகே குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால் திருமண நிகழ்ச்சிக்கு வந்த வர்கள் தப்பி ஓடினர்.
ஆனைமலை அடுத்த அம்பராம்பாளையம் பகுதியில் தனியார் குடோன் உள்ளது. இந்த குடோனில் இன்று மதியம் திடீரென எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த குடோனின் தொடர்ச்சியாக திருமண மண்டபம் உள்ளது. இன்று அந்த மண்டபத்தில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மதிய விருந்துக்கு அனைவரும் பந்தி பரிமாறி சாப்பிட இருந்த நேரத்தில் அருகில் தீ விபத்து ஏற்பட்டதால் அனைவரும் திருமண மண்டபத்தில் இருந்து தப்பி ஓடினர். பொள்ளாச்சி தீயணைப்பு துறையினர் வந்து தீயை அனைத்து வருகின்றனர். ஆனமலை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments