Breaking News

ஆழியாறு பாசன சங்க தேர்தல்




ஆழியாறு அணை பாசன சங்க தேர்தல் வேட்புமனு பெறுதல் துவக்கம்
பொள்ளாச்சி, மார்ச்.
 ஆழியாறு அணை பாசன சங்கங்களுக்கு தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் வேட்பு மனுக்கள் பெறுதல் இன்று காலை துவங்கியது.
 ஆழியாறு அணையில் பழைய ஆயக்கட்டில் 6400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டில் 44 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதிபெறுகின்றன. இதில் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தனித்தனியாக நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க மாவட்ட ஆட்சித்தலைவரால் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.   16ம் தேதி  வேட்புமனுக்கள் பெறுதல், 21ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், 21ம் தேதி மதியம் 2 மணிக்கு வேட்புமனுக்களை திரும்ப பெறுதலும்,  மாலை 4 மணிக்கு சின்னங்கள் ஒதுக்குதல் நடைபெறுகின்றன.  27ம் தேதி  காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை தேர்தல் நடைபெறவுள்ளது. மாலை 4 மணிக்கு வாக்கு எண்ணிக்கை செய்து முடிவு வெளியிடுதல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் வரும் 16ம் தேதி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்யலாம். சார்-ஆட்சியர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருக்கிறார். இன்று காலை முதலே வேட்புமனுக்களை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி தணிகைவேல் மற்றும் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கடாசலம் ஆகியோர் விவசாயிகளுக்கு வழங்கினர்.செயற்பொறியாளர் நரேந்திரன் , உதவி பொறியாளர்கள் ராஜாகண்ணன், குமரவேல், செந்தில்குமார், பிரகாஷ், கோகுல் கார்த்திக்
 இருபத்தி ஒரு பாசன சபை தலைவர்களும் 90 ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.13091 வாக்காளர்கள் உள்ளனர்.


No comments