Breaking News

பொள்ளாச்சி -பாலக்காடு சாலை மேம்பால பணிகள் ஒரு மாதத்திற்குள் முடிவடையும்


பொள்ளாச்சி-பாலக்காடு சாலை மேம்பால பணி ஒரு மாதத்திற்குள் முடிவடையும்
பொள்ளாச்சி, டிச.10-
பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் வடுகபாளையம் பிரிவில் அமைக்கப்பட்டுவரும் ரயில்வே மேம்பால பணிகள் ஒரு மாதத்திற்குள் முடிவடையும் என எம்எல்ஏ பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தார்.
 பொள்ளாச்சி-பாலக்காடு சாலை தமிழக-கேரள இணைப்பு சாலையாக இருப்பதால் இருமாநில போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதனால், இந்த சாலையில் வாகனப்போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். ஆனால், வடுகபாளையம் பிரிவில் பொள்ளாச்சி-போத்தனூர் ரயில்வே வழித்தடம் குறுக்கிட்டதால் ரயில்கள் வரும் நேரத்தில் சாலை போக்குவரத்து பாதிக்கப்படும். இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதை கருத்தில்கொண்டு பொள்ளாச்சி வி.ஜெயராமன் வடுகபாளையம் பிரிவில் மேம்பாலம் அமைக்க ரூ.50 கோடி நிதிபெற்று தந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டும் பணிகள் துவங்கி தற்போது முடியும் நிலையில் உள்ளது. வெள்ளிக்கிழமை பாலம் அமைக்கப்படும் பணிகளை பொள்ளாச்சி எம்எல்ஏ பொள்ளாச்சி வி.ஜெயராமன், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் பார்வையிட்டனர்.
அதற்கு பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறியது....தமிழகம்-கேரளம் இடையே இந்த சாலை முக்கியத்துவம் வாய்ந்த இருமாநில இணைப்பு சாலையாக உள்ளது. இதில், பொதுமக்களின் போக்குவரத்தை கருத்தில் கொண்டு பாலம் கட்டப்பட்டுவருகிறது. கரோனா காரணமாக பணிகள் சற்று காலதாமதம் ஆகியுள்ளது. வரும் ஒரு மாத்திற்குள் பாலம் அமைக்கும் பணிகள் முடிவடையும் என்றார்.
 உடன் அதிமுக நிர்வாகிகள் வீராசாமி, ஜேம்ஸ்ராஜா, ரகுபதி, நீலகண்டன், கனகு, அருணாச்சலம் உட்பட பலர் இருந்தனர்.

---

No comments