தமிழகம் -கேரளா இடையே பேருந்து சேவை துவக்கம்
தமிழக-கேரள பேருந்து போக்குவரத்து துவக்கம்
பொள்ளாச்சி, டிச.1-
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக-கேரள பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக தமிழகம் கேரளா இடையே பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று முதல் பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் இருந்து பாலக்காட்டுக்கு இரண்டு பேருந்துகளும், தத்தம் மங்களத்திற்கு ஒரு பேருந்தும், பரம்பிகுளம் ஒரு பேருந்தும், குருவாயூருக்கு இரண்டு பேருந்துகளும், திருச்சூருக்கு ஒரு பேருந்தும் என ஏழு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் கேரள அரசு பேருந்துகள் 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காலை 10 மணிக்கு முன்பு தனியார் பேருந்து ஒன்றும் இயக்கப்பட்டுள்ளது. தமிழகம் -கேரளா இடையே பேருந்து சேவை துவங்க வேண்டும் என்று கேரள மாநில தமிழ் பாதுகாப்பு இயக்கம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.இயக்கத்தின் தலைவர் பேச்சிமுத்து கூறுகையில்... தமிழகம் கேரளா இடையேபேருந்து சேவை நிறுத்தப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர் தற்போது பேருந்துகள் இயக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது தமிழக -கேரளா அரசுகளுக்கு நன்றி,
மொழிச் சிறுபான்மை ஆணையருக்கும் நன்றி என்றார்.
தமிழகம் -கேரளா இடையே பேருந்து சேவை துவக்கம்
Reviewed by Cheran Express
on
November 30, 2021
Rating: 5
Reviewed by Cheran Express
on
November 30, 2021
Rating: 5
No comments