Breaking News

ஆழியாறு அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்


ஆழியாறு அணையிலிரந்து 3500 கன அடி உபரிநீர் வெளியேற்றம்
பொள்ளாச்சி, நவ.18- கனமழையின் காரணமாக ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் ஆழியாறு அணையிலிருந்து 3 ஆயிரத்து 500 கன அடி உபரிநர் வெளியேற்றப்படுகிறது.
 நேற்று இரவு ஆழியாறு பொள்ளாச்சி மற்றும் ஆழியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இரவு ஆழியாறு அணைக்கு 6 ஆயிரம் கன அடி நீர்வரத்து ஏற்பட்டது. இதையடுத்து, 6 ஆயிரம் கன அடி உபரிநீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டது. காலை மழை நின்று விட்டதால் ஆழியாறு அணைக்கு நீர்வரத்து 3500 கன அடியாக இருந்தது. ஆழியாறு அணையிலிருந்து அதே அளவு உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் வரத்தை செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் லீலா உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அதேபோல் குரங்கு நீர்வீழ்ச்சி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குரங்கு நீர்வீழ்ச்சி மூடப்பட்டுள்ளது. ஆழியாறு அணை அருகே சின்னார்பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்றிரவு கனமழை பெய்ததால் மலைவாழ் மக்களின் பாதுகாப்பை கருதி வனத்துறையினர் மற்றும் போலீசார் சின்னார் பதி மலைவாழ் மக்கள் குடியிருப்புக்கு சென்று பாதுகாப்பு அளித்தனர். மலைவாழ் மக்களை அங்கிருந்து வெளியேறி ஆழியாறு பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றிற்கு வருமாறு அழைத்தனர். ஆனால், அவர்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, மழை குறையும் வரை அதிகாரிகள் அங்கேயே காவல் இருந்தனர். மழை குறைந்த பிறகு அங்கிருந்து அதிகாரிகள் வெளியேறினர்.

No comments