Breaking News

சாலை சேதம்-பொள்ளாச்சி வால்பாறை போக்குவரத்து நிறுத்தம்


பொள்ளாச்சி வால்பாறை போக்குவரத்து நிறுத்தம்
 பொள்ளாச்சி, நவ.18-
 கனமழையால் பொள்ளாச்சி- வால்பாறை சாலை ஆழியாறு அருகே சேதமடைந்ததால் பொள்ளாச்சி- வால்பாறை இன்று காலை முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
 பொள்ளாச்சி, ஆழியாறு, வால்பாறை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. ஆழியாறு பகுதியில் அறுபத்தி ஆறு மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்நிலையில், நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆழியாறு வனத்துறை சோதனைச் சாவடி அருகே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலையில் ஒரு பகுதி பள்ளம் ஏற்பட்டது. இதனால், வனத்துறையினர்  கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தி வந்தனர். இந்நிலையில், காலை மீண்டும் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து, பொள்ளாச்சி -வால்பாறை சாலையில் செல்ல தடைவதிக்கப்பட்டுள்ளது. எந்த வாகனங்களும் செல்ல முடியாத அளவிற்கு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பொள்ளாச்சி வால்பாறை பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை. இருசக்கர வாகனத்தில் செல்வோர் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.

1 comment:

  1. Casinos Near Casinos Near Casinos Near Casinos by Paypal - Mapyro
    Casinos with Paypal in Atlanta, GA 청주 출장안마 - Find Casinos Near 화성 출장마사지 Casinos Near You 고양 출장샵 in Atlanta, 논산 출장마사지 GA. 하남 출장마사지

    ReplyDelete