Breaking News

மழை வெள்ளத்தில் சிக்கிய இருவரை மீட்ட தீயணைப்பு துறையினர்


மழை வெள்ளத்தில் சிக்கிய இருவரை மீட்ட தீயணைப்பு துறையினர்

பொள்ளாச்சி, நவ.3-
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ளது பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில். இந்த கோயில் பாலாற்றின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. நேற்று கோயிலின் இரவுக் காவலர்கள் திருமலைசாமி மற்றும் மகாலிங்கம் ஆகியோர் கோயிலுக்கு காவல் பணிக்கு சென்றுள்ளனர். அவர்கள் செல்லும்பது ஆற்றில் குறைவான அளவு தண்ணீரே சென்றுள்ளது. இரவு தொடர்ந்து மழை பெய்ததால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோயிலை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்து விட்டது. இதனால், காவலர்கள் கோயிலில் இருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையிலான அதிகாரிகள் கோயிலுக்குள் சென்று இரவு காவலர்களை கயிறு கட்டி மீட்டு வந்தனர். போலீசார் மற்றும் பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு உதவி புரிந்தனர்.

No comments