Breaking News

ஆழியாரில் புதிய வண்ணத்துப்பூச்சி பூங்கா


ஆழியாரில் புதிய வண்ணத்துப்பூச்சி பூங்கா  

பொள்ளாச்சி, அக்.31-
 ஆழியாரில் புதிய வண்ணத்து பூச்சி பூங்கா திங்கள்கிழமை முதல் திறந்து வைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
 ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்தில் குரங்கு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. வனத்துறை சார்பில் சிறுவர்கள் வந்து செல்ல வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் பணிகள் முடிவடைந்து  திங்கள்கிழமை காலை முதல் சுற்றுலா பயணிகள் பார்த்து செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு வனத்துறை ரூ.10 கட்டணமாக பெற உள்ளது. இந்த வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்குள் செயற்கை நீர்வீழ்ச்சி ஒன்றும், கண்காணிப்புக் கோபுரம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை நீர்வழ்ச்சியில் குழந்தைகள் மட்டும் குளித்து மகிழ அனுமதி அளிக்கப்படுகிறது. 

No comments