Breaking News

பரம்பிக்குளம் அணை நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றம்


பரம்பிக்குளம் அணை நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றம்
பொள்ளாச்சி, செப்.6-
பிஏபி திட்டத்தில் அதிக கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணை நிரம்பியதால் ஞாயிற்றுக்கிழமை இரவு  உபரி நீர் திறக்கப்பட்டது.
 பரம்பிக்குளம் -ஆழியாறு திட்டத்தில் மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர்ஆழியாறு, திருமூர்த்திமலை என ஒன்பது அணைகள் கட்டப்பட்டு உள்ளது. இதில் பரம்பிக்குளம் அணை அதிக கொள்ளளவு கொண்டது.இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழையால் பிஏபி திட்டத்தில் உள்ள அனைத்து நரம்புகளும் நிரம்பியுள்ள நிலையில் பரம்பிக்குளம் அணையும் நிரம்பி இருந்தது. ஆனால்,  நீர்வரத்து குறைவாக இருந்ததால் உபரிநீர் வெளியேற்றப்படாமல் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை சோலையாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிவு இருந்ததால் அணைக்கு 3000 கன அடி நீர்வரத்து இருந்தது. இதனால், டனல் வழியாக தூணக்கடவு அணைக்கு ஆயிரம் கன அடியும், மதகுகள் வழியாக கேரளாவிற்கு உபரி நீர் 2 ஆயிரம் கன அடியும் திறக்கப்பட்டது.
நீர் வரத்தை  கண்காணிப்பு பொறியாளர் முத்துச்சாமி, செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி பொறியாளர் தியாகராஜன் உள்ளிட்ட குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

No comments