Breaking News

பொள்ளாச்சியில் 2 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு


பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் இரு ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது


பொள்ளாச்சி, செப்.4-
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் இரண்டு பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி பெத்தநாயக்கனூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணி புரியும் பாலமுருகன் என்பவர் கொரோனா பேரிடர் காலத்தில் கொரோனா கட்டுப்பாட்டு  மையத்தில் பணியாற்றியதற்காகவும், மாணவர்களுக்கு வீடு தேடி சென்று பாடம் கற்பித்தமைக்காகவும் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்துள்ளது. 
இதேபோன்று, பொள்ளாச்சி அடுத்த ஏரிப்பட்டி அரசு நடுநிலை பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றிவரும் கீதா என்பவர் கொரோனா பேரிடர் காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி மூலம் பயிறுவித்தற்காகவும் வீட்டிலேயே அறிவியல் எளிய செயல்முறை விளக்கம் செய்து தன் அலைபேசி மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பித்தது போன்ற செயல்களுக்காக நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் ஞாயிற்றுக்கிழமை கோவையில் விருதை வாங்க உள்ளனர்.




No comments