Breaking News

டார்ச் வெளிச்சத்தில் தடுப்பூசி -கோட்டூர் பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் அவலம்

டார்ச் வெளிச்சத்தில் தடுப்பூசி - -கோட்டூர் பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியம்

கோட்டூரில் மின் விளக்கு இல்லாமல் டார்ச் வெளிச்சத்தில் தடுப்பூசி போட்டது குறித்து பொதுமக்கள் கூறியதாவது...
கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கோட்டூர் பகுதி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் 400 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் பள்ளியில் மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் சுகாதாரத்துறை செவிலியர்கள் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டனர்.
 கோட்டூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் மதியம் 2 மணிக்கு தடுப்பூசி செலுத்துவதாக தெரிவித்து இருந்தனர். ஆனால் மாலை 4 மணிக்கு தான் மருந்து கொண்டு வந்தனர். தடுப்பு ஊசி முகாமுக்கு கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் போதிய வசதிகள் செய்து தரவில்லை. மின்விளக்கு வசதி இல்லாததால் செவிலியர்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக செல்போன் வெளிச்சத்தில் இரவு ஏழு முப்பது மணி வரை தடுப்பூசி செலுத்தினர். கோட்டூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் மின் விளக்கு வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் செய்து தராமல் அலட்சியம் காண்பித்தனர் என்றனர்.

No comments