Breaking News

தேனீக்கள் கொட்டி ஒருவர் உயிரிழப்பு - 17 பேர் காயம்


தேனீக்கள் கொட்டி ஒருவர் உயிரிழப்பு 17 பேர் காயம்

 பொள்ளாச்சி, ஆக.27- 
பொள்ளாச்சி அருகே  ஆற்றில் திதி கொடுப்பதற்காக சென்றபோது தேனீக்கள் கொட்டி ஒருவர் உயிரிழந்தார், 17 பேர் காயமடைந்தனர்.
 பொள்ளாச்சி அடுத்த குரும்பபாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார்,(29). இவருடைய பாட்டி மயிலாத்தாள் கடந்த 16 நாட்களுக்கு முன்பு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
 இந்நிலையில் 16 வது நாள் திதி கொடுப்பதற்காக பொள்ளாச்சி அடுத்த ஆழியாற்றில் அம்பராம்பாளையம் பகுதியில் அவரது குடும்பத்துடன் 11 பேர் வந்து உள்ளனர். அவர்கள் ஆற்றங்கரையில் திதி கொடுப்பதற்காக யாகம் நடத்தியுள்ளனர். அப்போது அதிலிருந்து கிளம்பிய புகையால் அருகில் இருந்த தேன் கூடு கலைந்து அனைவரையும் கொட்டத் தொடங்கியுள்ளது.ரமேஷ்குமார் குடும்பத்தார் தவிர மேலும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பலர் தேனீக்களிடம் மாட்டிக்கொண்டனர். பலர் தேனீக்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அருகில் உள்ள மோட்டார் ரூம் மற்றும் கார்களில் ஏறி ஒளிந்து கொண்டனர். பலர் தண்ணீரில் இறங்கி கொண்டனர். ரமேஷ்குமார் தேனீக்களிடம் மாட்டிக்கொண்டார். நூற்றுக்கும் மேற்பட்ட தேனீக்கள் கொட்டியதாக தெரிகிறது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 17 பேர் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்தனர். 11 பேர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கும், 6 பேர் அம்பராம்பாளையம்  தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

No comments