கார் கிணற்றில் விழுந்து தாத்தா உயிரிழப்பு -பேரன் படுகாயம்
புதிய காரை கோயிலுக்கு செல்ல எடுத்தபோது கிணற்றில் தவறி விழுந்த பரிதாபம்-
தாத்தா உயிரிழப்பு- பேரன் படுகாயம்
பொள்ளாச்சி, ஆக.17-
பொள்ளாச்சி அருகே தாங்கள் வாங்கிய புதிய காரில் கோயிலுக்குச் செல்வதற்காக காரை எடுத்தபோது கிணற்றில் தவறி விழுந்து தாத்தா உயிரிழந்தார், காரில் இருந்த பேரன் படுகாயமடந்தார்.
பொள்ளாச்சி அடுத்த ஏ.நாகூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன்(67), விவசாயி, இவர் நேற்று புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த காரில் இன்று குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்வதற்காக வீட்டுக்குள் இருந்து வெளியே காரை எடுத்துளளார்.
கார் ஆட்டோ கியர் என்பதால் ஏற்கனவே ரிவர்ஸ் கியரில் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து, வீட்டருகே இருந்த 50 அடி கிணற்றில் தவறி விழுந்தது. அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கும், கோமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையிலான குழுவினர் கிணற்றுக்குள் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர். காரை ஓட்டிய ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது எட்டு வயதுப் பேரன் நகுல் கிருஷ்ணன் காயமடைந்து பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். கிணற்றில் இருந்து தீயணைப்பு துறையினர் காரையும் மீட்டனர். கோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் கிணற்றில் விழுந்து தாத்தா உயிரிழப்பு -பேரன் படுகாயம்
Reviewed by Cheran Express
on
August 16, 2021
Rating: 5
Reviewed by Cheran Express
on
August 16, 2021
Rating: 5
No comments