Breaking News

1.5 டன் ரேசன் அரிசி பறிமுதல்

1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 
பொள்ளாச்சி, ஆக. 22-
 பொள்ளாச்சியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
 பொள்ளாச்சி சி டி சி காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பொள்ளாச்சி டிஎஸ்பி தமிழ்மணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சி டி சி காலனி பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் வீட்டுக்குள் 32 பைகளில் 1.5 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதுடன் பிரபு ராம் என்பவரையும் கைது செய்தனர்.

No comments