Breaking News

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தை கொலை-தாயே குழந்தையை கொன்ற கொடூரம்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தை கொலை

தாயே குழந்தையை கொன்ற கொடூரம்

பொள்ளாச்சி, ஆக.16- 
ஆனைமலை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தையை தாயே கொலை செய்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
 ஆனைமலை அருகே உள்ள தம்மம்பதி கிராமத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன் சரோஜினி தம்பதியினர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. 
சனிக்கிழமை  மணிகண்டன், சரோஜினி தம்பதியின் 3 வயது பெண் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு  உயிரிழந்தது. குழந்தையின் உடல்நலக்குறைவில் சந்தேகம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஆனைமலை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவல் மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, எஸ்பி தலைமையில் போலீஸார் தம்மம்பதியில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். குழந்தையின் பெற்றோர்கள் எஸ்பியிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக தெரிகிறது. இதையடுத்து, குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீஸார் விசாரணையை தொடர்ந்தனர். விசாரணையில், குழந்தையின் தாய் சரோஜினிக்கும் சர்க்கார்பதி கிராமத்தை சேர்ந்த சின்னபொம்மன் என்பவருக்கும் கள்ளக்காதல் இருப்பதும் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை தாய் சரோஜினி கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, டிஎஸ்பி சீனிவாசன், ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் சின்னக்காமணன் மற்றும் ஆனைமலை போலீசார் தாய் சரோஜினி மற்றும் கள்ளக்காதலன் சின்னபொம்மன் ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தனர்.

No comments