Breaking News

ஆனைமலை அருகே கஞ்சா பறிமுதல்


ஆனைமலை அருகே ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

 பொள்ளாச்சி, ஆக.9-
 ஆனைமலை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட எஸ்பி கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 கோவை மாவட்ட எஸ்பி க்கு ஆனைமலை அருகே கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, எஸ்பியின் சிறப்புக்குழு எஸ்ஐ முரளி, காவலர்கள் சாந்தகுமார், சுரேஷ் உட்பட போலீசார் ஆனைமலையை அடுத்த மணக்கடவு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மோகன்ராஜ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கஞ்சா விற்பது தெரியவந்தது. இதையடுத்து, மீனாட்சி புரதத்தை சேர்ந்த மோகன்ராஜ் 33 கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. எஸ்பியின் சிறப்புக் குழுவினர் ஆனைமலை போலீசில் கஞ்சாவை ஒப்படைத்தனர்.

No comments