விவசாயிகளுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு ஆதரவாக இந்துமக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி, ஆக.1-
பிஏபி கால்வாய்களை தூர்வார வேண்டும் என கோரிக்கை வைத்து விவசாயிகளுக்கு ஆதரவாக இந்து மக்கள்கட்சியினர் பிஏபி அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.
பிஏபி திட்டத்தில் திருமூர்த்தி அணையில் இருந்து வரும் 3ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது. தண்ணீர் திறப்பதற்கு முன்பு கால்வாய்களை தூர்வாரவேண்டும், அதற்கு அரசு நிதி ஒதுக்கி தரவேண்டும் என விவசாயிகள் அரசிடம் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், நிதித்துறையில் கால்வாய்களை தூர்வார நிதிமறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கிடைக்கும் தண்ணீரையும் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதையடுத்து, விவசாயிகளுக்கு ஆதரவாக கால்வாய்களை தூர்வாரக்கோரியும், நிதி ஒதுக்கக்கோரியும் திங்கள்கிழமை பிஏபி அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். கட்சியின் கோவை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ் இந்த தகவலை தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
Reviewed by Cheran Express
on
August 01, 2021
Rating: 5
Reviewed by Cheran Express
on
August 01, 2021
Rating: 5
No comments