Breaking News

பொள்ளாச்சியில் குப்பை வண்டியில் கபசுரக் குடிநீர் வினியோகம்


குப்பை வண்டியில் கபசுரகுடிநீர் விநியோகம்

சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
பொள்ளாச்சி, ஜூலை.10
 பொள்ளாச்சியில் குப்பை  அள்ளும் வண்டியில் நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கியதால் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
 பொள்ளாச்சி நகராட்சி சார்பாக சனிக்கிழமை 9வது வார்டு விஜயபுரம்-அறிவொளிநகர் பகுதியில்  நகராட்சி ஊழியர்கள் கபசுரகுடிநீர் விநியோகம் செய்துள்ளனர். பொதுமக்கள் வசிக்கும் சிலவீடுகளில் கபசுரகுடிநீர் விநியோகம் செய்த நிலையில் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் கபசுரகுடிநீர் விநியோகம் செய்த வாகனத்தை பார்த்தபோது அதில் சாக்கடை கழிவுகள் மற்றும் குப்பைகள் சிறதளவு இருந்துள்ளதாக தெரிகிறது. குப்பை அள்ளிய வண்டியிலேயே சுகாதார அதிகாரிகள் கபசுரகுடிநீர் விநியோகம் செய்ததை அறிந்த மக்கள் குப்பை அள்ளும் வாகனத்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீஸார் வந்து பொதுமக்களிடம் பேச்சு நடத்தி வாகனத்தை விடுவித்தனர். கரோனா தடுப்பிற்காக நகராட்சி சுகாதாரத்துறை சார்பில் குப்பை வாகனத்தில் கபசுரகுடிநீர் விநியோகம் செய்த சம்பவம் நடைபெற்றது பொதுமக்களை அதிருப்தியடைய செய்துள்ளது.

---

No comments