Breaking News

பொள்ளாச்சி பெயரே இல்லாத தெருவால் குழப்பம்


பொள்ளாச்சியில் பெயரே இல்லாத தெருவால் குழப்பம்

பொள்ளாச்சி, ஜூலை.10-
பொள்ளாச்சியில் 14வது வார்டு பகுதியில் உள்ள ஒரு தெருவிற்கு பெயரே இல்லாததால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
 கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இதில் 14வது வார்டில் உள்ள செக்கு வீதி அருகில் உள்ள தெருவிற்கு இதுவரை பெயர் வைக்கப்படாமல் உள்ளது. இதனால், குடும்ப அட்டை, ஆதார் அட்டைகளில் தெளிவான முகவரி குறிப்பிடுவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தபால்கள் வழங்குவது, அந்த பகுதிகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிப்பது போன்ற பல்வேறு குழப்பங்கள் இருந்துவருகின்றன. மேலும், இந்த தெருவில் சாக்கடைகள் அகற்றப்படாமலும், புதர் மண்டியும் கிடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ராஜீவ்காந்தி பேரவை மாநிலத்தலைவர் பஞ்சலிங்கம் பொள்ளாச்சி சார்-ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் தெருவிற்கு பெயர் வைக்க வேண்டி கோரிக்கை வைத்துள்ளார்.

---

No comments