Breaking News

தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து


தென்னைநார் தொழிற்ச்சாலையில் தீ விபத்து

பொள்ளாச்சி, ஜூலை.8
 பொள்ளாச்சி அருகே திம்மங்குத்து பகுதியில் உள்ள தென்னைநார் தொழிற்சாலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் மதிப்பிலான தென்னைநார்கள் எரிந்து சேதமானது.
 பொள்ளாச்சி அடுத்த திம்மங்குத்து பகுதியில் தனியாருக்கு சொந்தமான தென்னைநார் தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ள தென்னைநார்கள் வைத்திருந்த பகுதியில் திடீரென தீ பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் தீ பரவி தென்னைநார்கள் அதிகமாக வைத்திருந்த பகுதியில் எரியத்துவங்கியது. பொள்ளாச்சியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான தென்னைநார்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. பொள்ளாச்சி தாலூக்கா போலீஸார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

---

No comments