Breaking News

7 லட்சம் திருடிக்கொண்டு ரயிலில் தப்பிய வடமாநில தொழிலாளி- சென்னையில் கைது செய்த பொள்ளாச்சி போலீசார்


7 லட்சம் திருடிக்கொண்டு ரயிலில் தப்பிய வடமாநில தொழிலாளி

விரைந்து நடவடிக்கை எடுத்து சென்னையில் கைது செய்த பொள்ளாச்சி போலீசார்
 பொள்ளாச்சி, ஜூலை.1- பொள்ளாச்சியில் ரூ. 7 லட்சத்தை திருடிக்கொண்டு ரயிலில் தப்பிய வரை காட்பாடியில் வைத்து மடக்கிப் பிடித்த பொள்ளாச்சி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பொள்ளாச்சி ஆரோக்கியநாதர் வீதியை சேர்ந்தவர் அமீர்சிங் (33), இவர் பஜார் வீதியில் தனலட்சுமி ஏஜென்சி என்ற பிளாஸ்டிக் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் ராஜஸ்தான் ஆக்கோடா பகுதியை சேர்ந்த ஜனக்சிங்(20) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அமீர் சிங்கின் வீட்டிலேயே தங்கி பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதிய உணவு சமைப்பதற்காக ஜனக்சிங்கை அமீர்சிங் வீட்டு சாவியை கொடுத்து அனுப்பியுள்ளார். ஆரோக்கியநாதர் வீதியில் உள்ள வீட்டிற்கு சென்ற ஜனக்சிங் வீட்டை திறந்து பீரோவில் வைத்திருந்த ரூ. 7 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிவட்டார். மதியம் உணவு சமைப்பதற்காக சென்ற ஜனக் சிங்கை தொடர்பு கொண்ட முதலாளி அமர்சிங் செல்போன் எடுக்கவில்லை என்று தெரிகிறது. மேலும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது ஜனக் சிங்கை காணவில்லை. இதையடுத்து சுற்றுப் பகுதிகளிலும் தேடிவட்டு சந்தேகத்தின் பேரில் வீட்டில் பீரோவை சோதனை செய்துள்ளார். அப்போது பீரோவில் வைத்திருந்த 7 லட்சத்தை காணவில்லை. இதையடுத்து, பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரையடுத்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் நடவடிக்கையில் இறங்கினர். செல்போன் எண்ணை வைத்து அவர் எங்கு இருக்கிறார் என்பதை போலீசார் டிரேஸ் செய்தனர். இதில் அவர் ரயில் மூலமாக சென்னைக்கு தப்பி செல்வது தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே போலீசார் உதவியுடன் ஜனக்சிங்கை காட்பாடியில் வைத்து பொள்ளாச்சி போலீசார் கைது செய்தனர். ரூ 7 லட்சத்தை திருடிக்கொண்டு தப்பிய நிலையில் உடனடியாக  விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்த பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு குவிந்து வருகிறது.

No comments