பாஜக சார்பில் தமிழக அரசை கண்டித்து போராட்டம்
பாஜக சார்பில் தமிழக அரசை கண்டித்து போராட்டம்
பொள்ளாச்சி. ஜூன். 13. டாஸ்மாக் கடையை திறந்ததற்கு திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.
கரோனா பரவல் இருந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை மூடி தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், டாஸ்மாக் கடைகளை குறிப்பிட்ட நேரம் மட்டும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்காக தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவில்பாளையம் காளியண்ணன்புதூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகி தனபாலகிருஷ்ணன் ஒன்றிய நிர்வாகி சுந்தரராஜூ உட்பட பலர் பங்கேற்றனர்.
நரசிங்காபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செந்தில்குமார், கருப்புசாமி, சிவசுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர். வடக்கு ஒன்றியத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணிக்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என்று கூறியதாகவும், ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் டாஸ்மாக் கடையை திறக்கிறார்கள என்றும் கூறி கண்டன கோஷம் எழுப்பினர்.
பாஜக சார்பில் தமிழக அரசை கண்டித்து போராட்டம்
Reviewed by Cheran Express
on
June 13, 2021
Rating: 5
Reviewed by Cheran Express
on
June 13, 2021
Rating: 5
No comments