ட்ரோன் கேமரா மூலம் மதுவிலக்கு போலீசார் கண்காணிப்பு
ட்ரோன் கேமரா மூலம் மதுவிலக்கு போலீசார் கண்காணிப்பு
சாராயம் காய்ச்சுவதாக புகார்
பொள்ளாச்சி. ஜூன். 12. பொள்ளாச்சி அடுத்த செமணாம்பதி பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சப்படுகிறதா என்பதை மதுவிலக்கு போலீசார் ஞாயிற்றுக்கிழமை ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்தனர்.
தமிழகம் முழுவதும் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இருந்தது இதனால் ஆங்காங்கே கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக தெரியவந்தது இதையடுத்து தமிழகம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த செம நாம் பகுதியில் வனப்பகுதி அருகே கள்ளச் சாராயம் காய்ச்ச படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தர்ராஜ் தலைமையில் ஆய்வாளர் பாலமுருகன், எஸ் ஐக்கள் சின்னக் காமணன், ராஜபிரபு மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் ட்ரோன் கேமரா மூலம் செமணாம்பதி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்ச படவில்லை என்பது தெரியவந்தது.
ட்ரோன் கேமரா மூலம் மதுவிலக்கு போலீசார் கண்காணிப்பு
Reviewed by Cheran Express
on
June 13, 2021
Rating: 5
Reviewed by Cheran Express
on
June 13, 2021
Rating: 5
No comments