Breaking News

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் நிரப்பும்போது கசிவு ஏற்பட்டதா ?விசாரணை நடத்த கோரிக்கை


பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் நிரப்பும்போது கசிவு ஏற்பட்டதா ?

விசாரணை நடத்த கோரிக்கை

பொள்ளாச்சி, ஜூன்.17
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் நிரப்பும்போது லாரியிலிருந்து ஆக்சிஜன் கசிந்ததாக புகார் எழுந்துள்ளது.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இன்று ஆக்சிஜன் செறிவூட்டும் மையங்களுக்கு லாரி மூலம் ஆக்சிஜன் கொண்டுவந்து நிரப்பப்பட்டது.
 அப்போது ஆக்சிஜன் கசிந்ததாக பொதுமக்கள் புகார் எழுந்துள்ளது. 

மேலும் ஆக்சிஜன் கசிந்தது போன்ற புகைப்படமும் வெளியாகியுள்ளது.
 இது குறித்து, சரியான புரிதல் இல்லாததால் உண்மையாக ஆக்சிஜன் கசிந்ததா அல்லது வேறு ஏதாவது பொருள் கசிவு ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.

No comments