கொரோனா பணிகளை எம்எல்ஏ ஆய்வு
கொரோனா பணிகளை எம்எல்ஏ ஆய்வு
வால்பாறை தொகுதியில் நடைபெற்று வரும் கரோனா தடுப்புப் பணிகளை எம்எல்ஏ அமுல் கந்தசாமி ஆய்வு செய்தார்.
வால்பாறை சட்டப்பேரவை தொகுதியில் சமவெளிப் பகுதியான ஆனைமலை தாலூக்கா பகுதிகளில் கரோனா பரவல் அதிகம் இருந்து வருகிறது.
இதையடுத்து, வியாழக்கிழமை ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்தில்எம்எல்ஏ தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற எம்எல்ஏ அமுல் கந்தசாமி வட்டாட்சியர் விஜயகுமாரிடம் கரோனா தடுப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து ஆனைமலை பேரூராட்சி அலுவலகம் மற்றும் கோட்டூர் பேரூராட்சி அலுவலகங்களில் கருணா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதிலும் எம்எல்ஏ பங்கேற்று செயல் அலுவலர்களிடம் தடுப்பு பணிகள் குறித்து கேட்டறிந்ததுடன் பேரூராட்சியில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். 
உடன் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் கார்த்திக் அப்புசாமி, சுந்தரம், ஆனைமலை பேரூராட்சி முன்னாள் தலைவர் சாந்தலிங்ககுமார், அதிமுக நகர செயலாளர்கள் ராஜேந்திரன், பாலு ஊராட்சி தலைவர்கள் பத்மநாபன், ராஜ்குமார், மகாலிங்கம், கோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.
  
  
  
No comments