Breaking News

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வால்பாறை எம்எல்ஏ ஆய்வு


கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வால்பாறை எம்எல்ஏ ஆய்வு 
பொள்ளாச்சி. ஜூன். 1.

வால்பாறை பகுதியில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி செவ்வாய்க்கிழமை பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார்.
செவ்வாய்க்கிழமை வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனை, பெரியபோது ஆரம்ப சுகாதார நிலையம், பெத்தநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையம், ஆனைமலை ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார். மேலும் கம்பால பட்டியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
 உடன் அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் கார்த்திக் அப்புசாமி,  சுந்தரம், ஆனைமலை முன்னாள் பேரூராட்சித் தலைவர் சாந்தலிங்ககுமார், அன்னூர் சரவணன், கம்பாலபட்டி ஊராட்சி தலைவர் ராஜ்குமார் உட்பட பலர் இருந்தனர். அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு செய்தபோது அங்கு மருந்து இருப்புகள்,  அங்கு உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

புட் நோட்... வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி.

No comments