Breaking News

5 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனோ படுக்கை வசதி தேவை -பொள்ளாச்சி எம்.எல்.ஏ ஆட்சியருக்கு கோரிக்கை


5 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனோ படுக்கை வசதி தேவை 

பொள்ளாச்சி எம்.எல்.ஏ ஆட்சியருக்கு கோரிக்கை
பொள்ளாச்சி. மே. 29

 பொள்ளாச்சியில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் 5 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினர் பொள்ளாச்சி வி. ஜெயராமன் ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பொள்ளாச்சி வடுகபாளையம் பகுதியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
 உடன் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் இருந்தார்.

அதற்குப்பிறகு பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது... கோவை மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது. குறிப்பாக பொள்ளாச்சியில் பரவல் அதிகரித்துவருகிறது.

 நகர் மற்றும் கிராமப்புறங்களில் பரவல் உள்ளது.
 பொதுமக்கள் அரசின் கரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். 

பொள்ளாச்சியில் கரோனா பரவல் அதிகமாக உள்ளதால் மாவட்ட ஆட்சியர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 50 வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் மற்றும் கிராம, நகரபகுதிகளில் கிருமி நசினி தெளிக்க வேண்டும்.

 பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கழிப்பிடங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். நெகமம், ராமபட்டினம், புரவிபாளையம், நல்லட்டிபாளையம், வடசித்தூர் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.

 மேலும் வடக்கிபாளையம், ராசக்காபாளையம், நல்லட்டிபாளையம், காட்டம்பட்டி, வடசித்தூர் மற்றும் நகராட்சிகளில் நான்கு இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்க வேண்டும்.
 அம்மா உணவகங்களில் உணவை அதிகப்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் செய்து தர வேண்டும் என்றார். மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனுவும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

புட் நோட்... வடுகபாளையம் பகுதியில் தடுப்பூசி போடும் பணியை பார்வையிட்ட பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர்.

No comments