Breaking News

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனஉயிரினங்கள் கணக்கெடுப்பு

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனஉயிரினங்கள் கணக்கெடுப்பு

பொள்ளாச்சி, மே.9
 
 

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.
 
 ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி, திருப்பூர் என இரண்டு கோட்டங்களாகவும், பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை, உடுமலை, அமராவதி என ஆறு வனசரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, செந்நாய், யானை, ராஜநாகம் உள்ளிட்ட பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்திற்கு முந்தைய வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி நடைபெறும். இந்த ஆண்டு வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி பொள்ளாச்சி கோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. 
 
தொடர்ந்து 15ம் தேதி வரை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

 

No comments