பொள்ளாச்சியில் ஒரே நாளில் 227 பேருக்கு கரோனா
பொள்ளாச்சியில் ஒரே நாளில் 227 பேருக்கு கரோனா
பொள்ளாச்சி, மே.6
பொள்ளாச்சியில்
நாளுக்குநாள் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவருகிறது. 50 சதவீதத்திற்கும்
மேற்பட்டோர் கரோனா விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. அதிகாரிகள்
அறிவுறுத்தினாலும் கண்டுகொள்வதில்லை.
போலீஸாரை பார்த்தால் மட்டும் சில
நிமிடங்கள் முகக்கவசம் அணிகின்றனர். இதனால், வியாழக்கிழமை ஒரே நாளில் 227
பேருக்கு கரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி
நகரத்தில் 46 பேருக்கும், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் 32 பேருக்கும்,
தெற்கு ஒன்றியத்தில் 73 பேருக்கும், ஆனைமலையில் 41 பேருக்கும்,
கிணத்துக்கடவில் 35 பேருக்கும் என மொத்தம் 227 பேருக்கு கரோனா தொற்று
கண்டறிபட்டுள்ளது.

No comments