Breaking News

ஆட்சியருக்கு கிணத்துக்கடவு எம்எல்ஏ கோரிக்கை மனு


ஆட்சியருக்கு கிணத்துக்கடவு எம்எல்ஏ கோரிக்கை மனு

பொள்ளாச்சி. மே. 25.
கோவை மாவட்ட ஆட்சியருக்கு கிணத்துக்கடவு எம்எல்ஏ செ.தாமோதரன் கரோனா பரவல் நடவடிக்கைகள் குறித்து கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
 அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது... கிணத்துக்கடவு தொகுதியில் மலுமிச்சம்பட்டி, சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பூசி மையம் அமைக்க வேண்டும். குறிச்சி பகுதியில் சில வார்டுகளில் கரோனா பரவல் அதிகளவில் உள்ளதால் அங்கு வாரத்திற்கு ஒருமுறை கிருமிநாசினி தெளிக்கவேண்டும்.
 கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும்.
கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு ஏற்படும் தாமதத்தை தவிர்க்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் சில மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோய்த்தொற்று ஏற்பட்டு அவர்கள் விடுப்பல் உள்ளனர். அவர்களுக்கு பதிலாக அந்த பணியிடங்களுக்கு தற்காலிக ஊழியர்களை நியமிக்க வேண்டும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

No comments