Breaking News

மக்கள் நீதி மய்யம் அலுவலகம் காலிசெய்யப்பட்டது

மக்கள் நீதி மய்யம் அலுவலகம் காலிசெய்யப்பட்டது

பொள்ளாச்சி, மே.9
 
 

பொள்ளாச்சியில் செயல்பட்டுவந்த மக்கள் நீதிமய்யம் கட்சியில் இரண்டாவது தலைமை அலுவலகம் காலிசெய்யப்பட்டது.
 
 மக்கள் நீதி மய்யம் கட்சியில் முதலாவது தலைமை அலுவலம் சென்னை ஆழ்வார்பேட்டையிலும், இரண்டாவது தலைமை அலுவலகம் பொள்ளாச்சியிலும் செயல்பட்டுவந்தது. 
 
மக்கள் நீதிமய்யம் கட்சியில் துணைத்தலைவராக உள்ள பொள்ளாச்சியை சேர்ந்த பிரபல மருத்துவர் மகேந்திரனின் மகாலிங்கபுரத்தில் உள்ள வீடு இரண்டாவது தலைமை அலுவலகமாக செயல்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவர் மகேந்திரன் தனது துணைத்தலைவர் பதவியை ராஜிநாமா செய்ததுடன் கட்சியில் இருந்தும் விலகினார். 
 
அதை தொடர்ந்து பொள்ளாச்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகினர். இந்நிலையில், சனிக்கிழமை பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் செயல்பட்டுவந்த மக்கள் நீதிமய்யம் கட்சியின் இரண்டாவது தலைமை அலுவலகம் காலிசெய்யப்பட்டது.
 
 அங்கு வைத்திருந்த கமல்ஹாசன் புகைப்படம், கட்சியின் பெயர்ப்பலகை போன்றவை அகற்றப்பட்டது.


 

No comments