உடுமலை அருகே 3 யானைகளை கொல்ல முயற்சி?
உடுமலை அருகே 3 யானைகளை கொல்ல முயற்சி?
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி, திருப்பூர் என இரண்டு கோட்டங்கள் ஆகவும், பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை, உடுமலை, அமராவதி என 6 வனச்சரகங்கள் ஆகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
இங்கு புலி, சிறுத்தை, யானை, ராஜநாகம் பல்வேறு வகையான மான்கள் என பல உயிர்கள் வாழ்ந்து வருகின்றன.<
/div>
இந்நிலையில், உடுமலை வனப்பகுதியில் உள்ள யானைகள் குடிநீரைத் தேடி தண்ணீர் உள்ள இடத்திற்கு வருவது வழக்கம். புதன்கிழமையன்று மூன்று யானைகள் குடிநீருக்காக திருமூர்த்தி அணையை நோக்கி வந்துள்ளன. அப்போது திருமூர்த்தி மலை கிராமத்தைச் சேர்ந்த பலர் யானைகளை குச்சி மற்றும் கல்லால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் வலி தாங்க முடியாமல் யானைகள் பிளிறியபடி ஓடியுள்ளன. யானைகளை விடாமல் கல்லாலும் குச்சியால் தாக்கி கொல்ல முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுபோன்று யானைகளை துன்புறுத்துவதும், யானைகளை தாக்குவதாலும் அவை உயிரிழக்கும் வாய்ப்புகளும் உண்டு. மனிதர்களின் தாக்குதலில் தப்பிக்கும் யானைகள் தொடர்ந்து மனிதர்கள் யாரை கண்டாலும் அதுவும் திருப்பித் தாக்க முயற்சிக்கும்.
சாதுவாக இருக்கும் யானைகளை மனிதர்கள் தாக்குவதும், துன்புறுத்துவது போன்ற செயல்களால் யானை- மனித மோதல்கள் அதிகரிக்கின்றன. இதனால்தான், பல்வேறு பகுதிகளில் யானைகள் மனிதர்களை தாக்குகின்றன.
இதில் மனிதர்களும் உயிரிழக்கின்றனர்.
இதுபோன்று யானைகளை துன்புறுத்தும் செயல்களால் தான் யானைகள் மனிதர்களை தாக்குகின்றன. அதில் மனிதர்கள் உயிரிழக்கின்றனர். இந்த மோதலுக்கு காரணமாக அமைவது மனிதர்கள்தான். மனிதர்கள் யானைகளை துன்புறுத்துதல், தாக்குதல் போன்ற செயல்களால் தான் மனிதர்களை தாக்கும் சூழலுக்குத் தள்ளப் படுகின்றன.
அதற்குப் பிறகு அந்த யானையை பிடிக்க வேண்டும், உயிர்கொல்லி யானை என்று கூவிக்கூவி யானைகளை பிடித்து கூண்டில் அடைக்கிறோம்.
இந்த யானைகளை பிடிக்கும் முயற்சியில் சில நேரங்களில் யானைகள் உயிரிழந்தும் விடுகின்றன. மேலும் அவை தங்கள் வாழ்விடத்தை விட்டு வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படுவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறது.
யானைகளின் குடும்பத்தை விட்டு நாம் பிரித்து தனியாக கொண்டுபோய் கூண்டில் அடைப்பது அவற்றின் சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும். இதுபோன்று மனிதர்கள் தொடர்ந்து ஈடுபடுவதால் தான் இயற்கையும் மனிதர்களுக்கு எதிராக செயல்படுகிறது.
தற்போது கொரோனா பரவல் அதிகரித்து மனிதர்கள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா பரவலை ஆராய்ந்து பார்த்தால் அதற்குக் காரணமும் நாம் இயற்கைக்கு எதிராக செயல்பட்டதாக இருக்கலாம்.
மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழாமல் இருப்பதால்தான் இதுபோன்று பெரும் தொற்று நோய்களும் ஏற்படுகின்றன. ஆகவே மனிதர்கள் இயற்கையை நேசிக்க கற்றுக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் மனித இனம் அழிவை நோக்கியே செல்லும்.
இப்படிக்கு சேரன் எக்ஸ்பிரஸ்...
No comments